idol sabbath
சிருஷ்டிப்பை சிருஷ்டித்தவர் சிருஷ்டிகரா? சிருஷ்டியா?
ஓய்வு நாள் என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்பதை விசுவாச அறிக்கை செய்வது 7ம் நாள் ஓய்வு ஆசரிப்பு.- யாத்திராகமம் 31:17.
இந்த மகிமையை 1ம் நாளுக்கு தள்ளிப் போடுவது கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்குவதே?!
உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.- யாத்திராகமம் 20:7.
இறைவா ஏன் ஏழாவது நாளில் ஓய்ந்திருந்தாய்? முதலாவது நாள் ஓய்வெடுத்து விட்டு பின்னர் படைப்பு செயலை ஆரம்பித்திருக்கலாமே?! என்று கேட்கலாமா?
அப்படியானால் மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?- ரோமர் 9:20.
சூரியன் வெடித்துச் சிதறியதில் சிதறியவையே அனைத்து கிரகங்களும், படைப்புகளும் என்பது இடையில் வந்த கிரேக்க ஞானமார்க்கம் போதித்தது.
அந்த சூரியனையே தேவரீர் படைத்தீர் என்பது நமது விசுவாச அறிக்கை.- சங்கீதம் 74:16.
குளிர் பனிக் காலத்திலே சூரியன் (தம்மூசு) காணப்படாத பொழுது பண்டைய கிரேக்கர்கள் சூரியன் செத்துவிட்டது என்று ஒப்பாரி வைக்கும் செயல்பாட்டைத்தான் எருசலேம் தேவாலயத்திலே தம்மூசுக்காக அழுது கொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள் என்று கூறுகிறான் தீர்க்கன் எசேக்கியேல் (8:14).
எருசலேம் தேவாலயத்திலே ஆண்கள் தங்கள் முதுகைக் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள்.- எசேக்கியேல் 8:16.
உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து, தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள்.- சங்கீதம் 74:4
தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள்,அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.- ரோமர் 1:25.
பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டவை நிறைவேறிவிட்டதா?! இனிமேல்தான் நிறைவேறவிருக்கிறதா?!
பழைய ஏற்பாட்டின் நிறைவேறுதலை, புதிய ஏற்பாடு, புதிய உடன்படிக்கை வந்துவிட்டது என்று கூறி கர்த்தர் இயேசு தூயஆவியின் வல்லமையை யாரும் தடுத்து நிறுத்த முடியுமா?!
ஏழாவது நாள் ஓய்வை கர்த்தர் ஏற்படுத்தினாரா?! முதலாவது நாள் ஓய்வையா?
இப்பொழுது நான் மனுஷரையா? தேவனையா? யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்?- கலாத்தியர் 1:10.
விக்கிரகம் என்பது மெய்யைப் போன்று தோன்றும் பொய்.
கர்த்தரின் படைப்பை அறிக்கை செய்யும் மெய்யான ஓய்வு நாளைப் போன்று சூரியனை (ஞாயிறை) மகிமைப் படுத்த மனிதன் ஏற்படுத்திய போலியான:பொய்யான:விக்கிரக ஓய்வு நாள்.
ஓரிறைக் கோட்பாட்டுடைய உலகின் இருமாபெரு இறைமக்களின் வேதக் கோட்பாடு வழியுறுத்தும் ஓய்வுநாள் நெறியிலிருந்து ஒருவர் முன்னோக்கி எத்தித்தள்ளவும் மற்றொருவர் பின்னோக்கி உதைத்துத் தள்ளவும் எவ்வாறு அக்கிரமத்தின் இரகசியம் வரவாற்றில் கிரியை செய்து வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது என்பதை இறைவனே வெளிப்படுத்துவார்.
அக்கிரமத்தின் இரகசியம்.-
(2தெசலோனிக்கேயர் 2:7)
இரகசியம், மகா பாபிலோன்.-
(வெளிப்படுத்தின விசேஷம் 17:5)
இறைவனையா?
சூரியனையா?
யாரைச் சேவிப்பீர்கள்?- யோசுவா 24:15.
வேதத்தின் கடைசியிலிருந்து 7 வது வசனம்:
விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.

Comments
Post a Comment